Sunday, November 21, 2010











என்னவனை

எனக்காக படைத்தான் என்று சொல்ல மாட்டேன்

ஏனென்றால்

நீ என்னருகில் இல்லை

உன்னை விட்டு கொடுக்க தெரிந்தவளுக்கு

உன் காதலை விட்டு கொடுக்க தெரியவில்லை

உன்னை ரசித்தேன்,

உன் மனதை ரசித்தேன்,

உன் சிரிப்பை ரசித்தேன்,

உன் அழகை ரசித்தேன்,

உன் பேச்சை ரசித்தேன்,

உன்னை கண்ணோடு கண்வைத்து பார்த்து ரசித்தேன்,

உன்னை என் விருப்பபடி ரசித்தேன்,

நீ என் அருகில் நெருங்கி வருவதை ரசித்தேன்,

இப்பொழுது

என்னை விட்டு விலகிசெல்வத்தையும் ரசிக்குறேன் .

Tuesday, July 27, 2010

மாலை நேர சூரியன் போல் மறைந்து நீயும் போனாயோ
காலையிலும் காணவில்லை
உன் விடியலை நான் தேடுகிறேன்
மழை கால மேகம் உன்னை மூடிக் கொண்டதோ
வெயில் களம் வெளியில் வந்து உன்னை காட்டிக் கொள்ளுமோ
கடல் அலையில் கரைந்தாயோ
என்னை நீயும் மறந்தாயோ
நாடகம் செய்தாயோ
நாளை நீயும் மண்ணில் வந்து மீண்டும் பிறப் பாயோ

Sunday, May 9, 2010


போட்டி


என் நிழலுக்கும்

உன் நினைவுக்கும்

கடைசியில் வெல்லுவது

ஏனோ

உன் நினைவு தான்

ஆம்

நிழல் இல்லாமல் கூட

இருந்து விடுவேன்

உன் நினைவு இல்லாமல்

இருந்தது இல்லை

Wednesday, January 20, 2010


காலம் ஒருநாள் மாறும்


காதல் தந்த வழிகளும் ஒரு நாள் தீரும்


மேற்கு சூரியன்


நம் காதல் சோகங்களை கடலில் கொட்டி தீரும்


புதிய சந்தோசம் கிழக்கு சூரியனாய் உதமாகும்

Sunday, December 13, 2009


வானம்
கீழே விலாமல் தாங்கி நிற்பது
பூமியில் உள்ள காதல்
என்று ஒரு கவிஞன் கூறினான்.
ஆம்!
அது உண்மைதான்,
இனி வரும் காலம்
வானம் தாங்கி நிற்க
நம் காதல் ஒன்றே போதுமே!

Sunday, November 22, 2009


என்னை மட்டும் அல்ல
என்னில் இருக்கும்
உன்னின் பிறந்த நாளையும்
மறக்க செய்த
உன் நினைவை காதல் என்று சொல்லுவதா அல்லது
என் சுவாசம் என்பதா........
எது மறக்க வைத்தது நீ சொல்லி தந்த பாடங்களா ...
முதன் முதலாய் பயம் காட்டி தந்த சின்ன அணைப்பா ...
உதடு வழி என் உயிர் பறித்த முதல் முத்தமா ...
என் சுவாசமாய் இருக்கும் உன் நினைவா ...
உன் காந்த விழி பார்வையில் முழுதாய் இழந்தேன் என்னை அதுவா ...
ஆயிரம் விண்மீன்கள் என் மீது கொட்டுவதை போல் உணர்வு தரும்
உன் அழகிய சிரிப்பா ...
என் வாழ்வின் கடைசி எல்லையின் முற்று புள்ளி வரை
நீ வேண்டும் என்ற எனது தவிப்பா ....