Wednesday, June 24, 2009

சொர்க்கம் அருகில் இல்லை



எல்லோரும் அருகில் இருந்தும்


என் கண் முன்னே !


உன் பார்வை மட்டுமே.!


என் காதுகளோ !


உன் குரலை மட்டுமே


அனுமதிக்குறது.


என் விரல்கள்


உனக்காக மட்டுமே


வேலை செய்கிறது .!


என் உயிர்


உன்னை மட்டுமே


சுற்றி வருகிறது .


என் நினைவில்


நி ! மட்டுமே


நிறைந்து நிற்கிறாய் !


உன் அணைப்பில் ,


நான் சொர்க்கம் காணுவேன் .


ஆனால் !


அந்த சொர்க்கம்


என் அருகில்


இல்லையே ?!

Thursday, June 18, 2009

தனிமை தவிப்புடன் நான்

வலியுடனே நீ அங்கே !
தனிமையிலே தவிப்புடன் நான் இங்கே!
உன் அருகே நான் இருந்து வலி போக்கவில்லை
அதற்க்கு தண்டனையா ?
என்னுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்பாதது.
மஞ்சத்தில் இன்பத்தில் மட்டும் அல்ல
உன்
துன்பத்திலும் வலியிலும் பகிர்ந்து கொள்ளவும் தானடா நான் !
அதை ஏன் மறந்தாய் !
என்னை தனிமையிலே தவிக்க விட்டாய் !
இனி இதுபோல் செய்யாதடா மச்சான்
ப்ளீஸ் .............

நினைவு

என் நினைவாக!
அவளிடம் ஒன்னும் இல்லை,
ஆனால் !
என்னிடம் !
அவள் நினைவை தவிர ,
வேற ஒன்றுமில்லை.

Tuesday, June 16, 2009

என்னை அடிக்காமல் அழ வைப்பது
நீ மட்டும் தான் !
என்னை காய படுத்தாமல்
வலிகள் தருவது
நீ மட்டும் தான்!
என்னை வெறுக்காமல்
வேதனை படுத்துவது
நீ மட்டும் தான் !
நான் வாழ்தலும் வீழ்தாலும்
என்னோடு இருப்பது
நீ மட்டும் தான்!

Sunday, June 7, 2009

வலி


உன் கரு விழி
இதய துடிப்பாய் மாறி
துடிக்கும் அந்த நொடியில்
நான்!
உன் அருகில்
உனது மனைவியின் மணவரை தோழியாய்!