
உன் நகம்
என்மேல் கோலம் போடும்
அந்த நொடி
என்னை பேச விடாமல்
உன் இதழ் அணை போடும்
அந்த நொடி
உன் அணைப்பு என் கைகளுக்கு
விலங்காய் அமையும்
அந்த நொடி
நீ கொஞ்சம் தின்னும்
கொஞ்சம் என்னை கொஞ்சும்
அந்த நொடி
காற்றே தீர்ந்தாலும்
உன் நினைவே சுவசமாகும்
அந்த நொடி
நாம் சேர்ந்து வாழ்வதாக
கனவு வரும்
அந்த நொடி
இவை அனைத்தும்
நடக்காது என்றுதெரிந்தாலும்
ஒரு சின்ன பேராசை
புற்கள் கூட
பூமியை கிழித்து கொண்டு
வெளி வருகிறதே
நாம் சேரும் நாள் வராதோ என்று
நான் காத்து இருக்கும்
அந்த நொடி
இவை அனைத்தும்
என் வாழ் நாளில்
மறக்க முடியாத
நிமிடங்கள் .